தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!

தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!
Published on
Updated on
1 min read

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்தை  மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் முதல் முறையாக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், தரமான மருத்துவச் சேவைகள் குறைந்த செலவில் வழங்கப்படுவதால், பல்வேறு வெளிநாடுகளின் சுகாதாரத் தேவைகளுக்கு நம்பகமான இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனினும் இடைத்தரகர்களின் இடையூறுகளால் சிறந்த சேவையை பயனாளிகள் பெற முடியாததால், இது போன்றவைகளை தவிர்க்க இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சவுதி அரேபியா, மொரீஷியஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அதனை தொடர்ந்து சிறந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், அயலக தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com