சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்...நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 காரைக்காலில் சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்...நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on
Updated on
1 min read

காரைக்காலில் இருந்து நெடுங்காடு செல்லும் பிராதான சாலைகளின் ஓரங்களில், மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. அதில் ரத்தக்கறையுடனான ஊசி, சிரஞ்சிகள், காயத்திற்கு கட்டப்பட்ட துணிகள், மருந்து மாத்திரைகள் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை   கொட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து இந்த பகுதியில் இதுபோன்ற கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பெருந்தொற்று அச்சம் உள்ள இந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இது போன்ற இடங்களில் சுகாதாரக் கேடு ஏற்படும் விதத்தில் கொட்டுவோர் மீது காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com