நடிகை மீனாவுக்கு பாலியல் அழுத்தமா!? தலைவர்கள் சந்திப்பின் பின்னணி இதானா..!? என்ன பாண்டியன் இப்படி சொல்லியிருக்கார்?

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பொருளாதார ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர், இது தாங்கமுடியாமல்...
actress meena with pm modi and vp
actress meena with pm modi and vp
Published on
Updated on
1 min read

சமீபத்தில் மீனா பாஜக -வில் இணையப்போகிறார், அவருக்கு மத்திய அரசில்  பொறுப்புகள் வழங்கலாம் என்று தொடந்து கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசுப்பால் கட்சிக்குள்ளேயும் பரபரப்பு நிலவியது. டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமரோடு நடன கலைஞர் கலா மாஸ்டர், மீனா ஆகியோர் கலந்துகொண்டனர் அதிலிருந்தே மீனா பாஜக -வில் இணையலாம் என பேசப்பட்டது.

நடிகை மீனா!

நடிகை மீனா 90 காலகட்டங்களில் மிகப்பெரும் நடிகையாக மிளிர்ந்தவர். மேலும் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய மீனா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவருக்கு கடந்த 2009 -ஆம் ஆண்டு சாஃப்ட் வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் 3 வருடங்களுக்கு முன்னர் நுரையீரல் தொற்று காரணமாக அவர் கணவர் உயிரிழந்தார். இதனால் மீனா தனது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார்.

எக்கச்சக்க சொத்துகள்..!

பத்திரிகையாளர் பாண்டியன் தனியார்  யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். “நடிகை மீனா சிறுக  சிறுக சம்பாதித்து பலகோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். அந்த சொத்துக்களுக்கு பாதுகாப்பாளர்களையும் நியமித்து வைத்துள்ளார், இந்த நேரத்தில்தான் துரதிர்ஷ்டவசமாக அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். இதன் பிறகு மீனாவை சுற்றிலும் பல தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பொருளாதார ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர், இது தாங்கமுடியாமல் தன மீனா பாஜக -வில் அதிலும் குறிப்பாக எல்.முருகனிடம் தஞ்சம் 

அடைந்துள்ளார். பள்ளி பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைத்து தீவிர பாஜக ஆதரவாளராக  மாறி பின்னர் மத்திய இணை அமைச்சராகவே மாறிவிட்டார் எல்.முருகன். மீனா தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள தனது சொத்துக்களை விற்றுவிட்டு திருவனந்தபுரத்திலே செட்டில் ஆகி விட முயற்சித்துள்ளார், ஆனால் அவரின் சொத்துக்களை பாதுக்காக்கும் பாதுகாவலர்கள் மீனாவுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். எனவே தன்னடியும் தன் சொத்துகளையும் பாதுகாத்துக் கொள்ளவே மீனா எல்.முருகனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக” அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் சந்திப்பு 

சமீபத்தில் மாநில அளவிலான 28 பதவிகளை புதிய நிர்வாகிகளை கொண்டு நிரப்ப பாஜக தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அப்போதைய ஆலோசனையின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ஆதரவாளர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. அதில் குஷ்பூ மீனா ஆகிய இருவரின் பெயரும் உள்ளது, இதன் அடிப்படையிலேயே துணை குடியரசு தலைவரை எல்.முருகன் மூலம் மீனா சந்தித்தார் எனக்கூறப்படுகிறது. எது எப்படியோ கடையில் கவுதமியின் நிலை மீனாவுக்கும் வராமல் இருந்தால் சரிதான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com