மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்

கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்
Published on: 
Updated on: 
1 min read

கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். செப்டம்பர் 21 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்போது, துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கள் துறைக்குரிய முன் தயரிப்புகளுடன் தயாராக  இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

தங்கள் தொகுதி குறித்த அனைத்து தரவுகளுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 29 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com