விபத்தான வாகனத்திலிருந்து மூட்டை மூட்டையாக போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச்சென்ற ஆண்கள். என்ன தெரியுமா?

Published on
Updated on
1 min read

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்  பீர்பாட்டில் ஏற்றுச்சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாந்தைத் தொடர்ந்து, சிதரிக்கிடந்த பீர் பாட்டில்களை மதுப்பிரியர்கள்  போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிசென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி நேற்று இரவு பாக்கம் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓர இடது புற பள்ளத்தில் கவிழ்ந்து. 

இதனால் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் பள்ளத்தில் சரிந்தன. இந்தத்  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதை அறிந்து சுற்று வட்டார மது பிரியர்கள் பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். சில பேர் பாட்டில்களை வயலில் பதுக்கிவைத்தனர். இதனை ஊழியர்கள் தேடி சென்று எடுத்து வந்தனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பலரும் பீரை எடுத்துச் செல்ல ஆர்வமுடன், அப்பகுதியில் குவிந்தனர். எனவே அப்பகுதியில் ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மறைத்து வைத்த பீர் பாட்டில்களை தேடி கண்டுபிடித்து சேகரித்தனர். இதனால் பல மது பிரியர்கள் ஏமாற்றுடன் திரும்பிச் சென்றனர்.

இந்தநிலையில் பெட்டிகளில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் இன்று மாலை வேறு வண்டிக்கு மாற்றப்பட்டு குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சிதரி கிடந்த பாட்டில்களை பெட்டியில் அடைக்க முடியாததால் வேறு வழி இன்றி ஊழியர்கள் அவர்களுக்கு தேவையானது எடுத்துக் கொண்டு மிச்ச பீர் பாட்டில்களை,  போட்டு விட்டு சென்றனர். 

இதனையடுத்து  அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சண்டே என்பதால் தேவையான அளவிற்கு பீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல துவங்கினர். இந்த தகவல் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீயாகப் பரவ துவங்கியது. 

இவ்வாறிருக்க, கோனி பை எடுத்துக் கொண்டு வந்த மது பிரியர்கள், மூட்டை மூட்டையாக பீர்களை அள்ளிச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு மது பிரியர்கள் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com