
மின் வினியோக கோளாறு விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின் வினியோக கோளாறு காரணமாக விம்கோ நகர் பணிமனை செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் டோல்கேட் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின் விநியோக கோளாறை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மின் விநியோக கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு மெட்ரோ இரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.