100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்...

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்...
Published on
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக,  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக உள்ளது. இதற்கேற்ப அணையின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 67 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்ததால், அணைக்கான நீர்வரத்து 39 ஆயிரத்து 634  கன அடியிலிருந்து 28 ஆயிரத்து 650 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து 650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட  அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று காலை வரை 99 புள்ளி 68 கன அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com