”எம்.ஜி.ஆர் எனது பெரியப்பா...” நெகிழ்ந்த முதலமைச்சர்!!!

”எம்.ஜி.ஆர் எனது பெரியப்பா...” நெகிழ்ந்த முதலமைச்சர்!!!
Published on
Updated on
2 min read

கருணாநிதிக்கு கிடைக்காத படிப்பு உனக்கு கிடைக்க வேண்டுமெனவும் எம்ஜிஆர் என்னை நன்றாக படிக்க வேண்டும் என்றும் கூறினார் - ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நூற்றாண்டு விழா:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர்  எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரங்கில் நடைபெற்ற  அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள  திருவள்ளுவர்  சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்., மேலும் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் -  சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகுடு மற்றும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நூல் ஆகியவற்றையும் வெளியிட்டார்.

நீங்கள் தான் காரணம்:

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் நான் பங்கேற்க முக்கிய காரணம் இந்த கல்லுரி மாணவிகளாகிய நீங்கள் தான்.  அருகில் உள்ள அடையாறு ஆலமரம் இருக்கும் பகுதியில் நான் நடை பயிற்சி செய்ய செல்வேன்.  அப்போது நான் இந்த வழியில் செல்லும் போது என்னுடைய வாகனத்தை பார்த்து மாணவிகள் சத்தம் போடுவார்கள்.  அது சத்தம் இல்லை Positive Vibe.  

விழாவில் பங்கேற்க:

முதல் பெண் முதலமைச்சர் யார் என்று பார்த்தால் ஜானகி அம்மா தான்.  அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.
1952 - 72 வரை - எம்.ஜி.ஆர். திமுகவில் இயங்கி வந்தார்.  அதுக்கும் முன் தேசிய கட்சியில் இருந்த அவரை திராவிடம் பக்கம் இழுத்தவர் கருணாநிதி என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறியுள்ளார்.  ஜானகி அவர்கள் கோரிக்கை ஏற்று இந்த டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி அதுவும் ஒரு முக்கிய காரணம் நான் இந்த விழாவில் பங்கேற்க என்று முதலமைச்சர் பேசினார்.

எம்.ஜி.ஆருடனான சந்திப்பு:

பள்ளி படிக்கும் போது இதே இடத்தில் பள்ளி நிதி பெற எம்.ஜி.ஆர். அவர்களை இதே சத்திய ஸ்டுடியோவில் சந்திக்க வந்துள்ளேன்.  அவ்வளவு ஏன் என் மேல் எம்.ஜி.ஆர். அதிக அளவில் பாசம் வைத்திருந்தார்.  எம்.ஜி.ஆர். படம் வெளியாகிறது என்றால் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன்.  அவரும் தொலை பேசியில் அழைப்பு விடுத்து எப்படி படம் இருந்தது என்று கேட்பார் என்று தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.

எம்.ஜி.ஆருடனான உறவு:

என்னை நன்றாக படி என்று அறிவுரை சொல்லி, கருணாநிதிக்கு கிடைக்காத கல்வி உனக்கு கிடைக்க வேண்டும் என்றும் அறிவுரை  வழங்கி உன் பெரியப்பா என்ற முறையில் இதை நான் சொல்கிறேன் என்றும் எம்.ஜி.ஆர் எனக்கு அறிவுரை கூறினார்.

ஜானகி பற்றி:

ஜானகி பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர், ஜானகி 6 மொழிகளில் தேர்ந்தவர், நன்றாக பாட கூடியவர், அவரே அவருக்கு ஒப்பனை செய்துகொள்வார்.  மருது நாட்டு இளவரசி என்ற படத்தில் கலைஞர் கதையில், எம்.ஜி.ஆர். ஜானகி நடித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டின் 3 முதலமைச்சர்கள் பணியாற்றி படம் அது.

கோரிக்கை:

சைகை மொழி பாடத்தை, பள்ளி கல்லுரியில் மொழி பாடமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை கல்லூரி சார்பில் கல்லுரி தாளாளர் லதா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை செயல் திட்டம் ஆக்குவோம் என்று முதலமைச்சர் பேசினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com