மணலை விட எம்.சாண்டு தான் உறுதித்தன்மை அதிகம்... பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்...

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பொதுப்பணித்துறை சார்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மணலை விட எம்.சாண்டு தான் உறுதித்தன்மை அதிகம்... பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்...
Published on
Updated on
1 min read
சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை சார்பான ஆய்வுக்கூட்டம்  அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுப்பணித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டதாகவும், 22 கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறினார்.
மணலை விட எம்.சாண்டு தான் உறுதித்தன்மை அதிகம் என்றும், ஆற்றுமணல் கிடைக்காத  சூழலில் எம்.சாண்ட் மணலை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொதுப்பணித்துறை பணிகள் இரவு நேரத்தில் மட்டுமே நடைப்பெறுவதாகவும், இரவு நேர பணிகளுக்கான நேர நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, டீசல் விலை அதிகரிப்பால் வண்டி வாடகையை ஏற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தாக குறிப்பிட்டார்.
நிதி நிலை சார்பாகவும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தரமான சாலைகளை அமைப்பது தான் தொலைநோக்கு திட்டத்தின் இலக்கு எனவும், மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை அமைக்கும் போது பழைய சாலைகளை அகற்றிவிட்டு தான் புதிய சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com