ஜனவரி 18 ஆம் தேதி பொது விடுமுறையா?...விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

ஜனவரி 18 ஆம் தேதி பொது விடுமுறையா?...விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி பரவிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை :

தைத்திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை வழங்கி, வரும் 18 ஆம் தேதி மீண்டும் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

மீண்டும் ஒருநாள் விடுமுறை :

இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்திருந்ததால், அதனை கருத்தில் கொண்டு ஜனவரி 18-ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

விளக்கமளித்த அமைச்சர் :

இந்நிலையில் வரும் 18ஆம் தேதி பொது விடுமுறை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com