
திருப்பூரில் நடைபெற்ற, ஒன்றிய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டதில் மத்திய இணை அமைச்சா எல். முருகன், மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வ.உ.சி. திடலில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒன்றிய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றுள்ளார்.
அமைச்சர் எல். முருகன் பேசுகையில், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
மேலும், உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியதோடு, வளரும் நாடுகளின் பட்டியலில் 17 வது இடத்திலிருந்து தற்போது 5-வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். என்றும் தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மோடியை பிரதமராக்க வேண்டும், எனவும் பேசியுள்ளார்.
மேலும், அதில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கணவரை தாக்கிய காவலர்கள்... தர்ணாவில் ஈடுபட்ட மனைவி!!