ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்...!

ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்...!
Published on
Updated on
1 min read

"மக்களை தேடி மருத்துவம்" திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தவறான புள்ளி விவரங்களை கூறியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விளக்கம் அளிக்கப்படும் :

சென்னை அடையார், கண்ணகி நகரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஸ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் வந்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மறு விளக்கம் கேட்டு கடந்த 13ம் தேதி ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து கடிதம் வந்திருப்பதாகவும், இது குறித்து விரைவில் சட்ட வல்லுநர்களுடன் பேசி அதற்கும் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஈபிஎஸ்க்கு பதிலளித்த அமைச்சர் :

தொடர்ந்து, எடப்பாடி ”மக்களை தேடி மருத்துவம்” தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசு தவறான புள்ளி விவரத்தை கூறுவதாக தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி எப்போது தூக்கத்தில் இருந்து விழித்தார் என்று தெரியவில்லை. ஏனென்றால் முதல் பயனாளிக்கு முதலமைச்சர் வழங்கினார். அதேபோன்று சிட்லபாக்கத்தில் 50 லட்சமாவது பயனாளிக்கும், நாமக்கலில் 75 லட்சமாவது பயனாளிக்கும், திருச்சியில் 1 கோடியே 1வது பயனாளிக்கும் வழங்கப்பட்டது. எனவே, எதிர்கட்சிதலைவருக்கு வேண்டுமானால் டிபிஎஸ் அலுவலகத்திற்கு நேரில் வந்து விவரங்களை பெற்று பார்த்து கொள்ளட்டும் என்று கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com