மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்...நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!

மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்...நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!
Published on
Updated on
1 min read

திருக்கோவிலூரில்  திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி வழக்கம் போல் கட்சி நிர்வாகிகளை ஆவேசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது திமுக தலைமை கழகத்தின் சார்பில் புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.  

ஆனால், திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை  தூக்கி வீசி விட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என கூறி பாதியிலே சென்றுள்ளார். இச்சம்பவம் திமுக நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாகவே, பொதுவெளியில் திமுக அமைச்சர்கள் தொண்டர்களை கண்டபடி அடிப்பதும், தள்ளிவிடுவதும், மரியாதை குறைவாக நடத்துவதுமாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது பொன்முடி நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி வீசியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com