செக் நாட்டு தொழிற்துறையினருக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டு அந்த நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய அமைச்சர் தா.மோ. அன்பரசன் அழைப்பு விடுத்தார்.
செக் நாட்டு தொழிற்துறையினருக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என சிறு, குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

செக் குடியரசு பயணம்

தொழில் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு  திரும்பிய அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டிற்குச் சென்றார்.

அங்கு நடைபெற்ற தொழில் நிறுவன கண்காட்சியில் கலந்து கொள்ள சென்றார். அவருடன் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், நிதித்துறை அரசு துணை செயலாளர் சி.பிஆதித்யா செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் சிலர் உடன் சென்றனர்.  

தொழிற்சாலைகளை பார்வையிட்டனர்

'எவெக்டார்' விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டு அந்த நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய அமைச்சர் தா.மோ. அன்பரசன் அழைப்பு விடுத்தார். இந்த பயணத்தை முடித்து கொண்டு துபாய் வழியாக சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் திமுகவினர் சால்வை அணிவித்து பூங்கொத்து தந்து வரவேற்றனர். பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 3 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கண்காட்சி செக் குடியரசு நாட்டில் நடந்தது. அதில் தமிழ்நாடு அரசு சார்பில் நானும் துறை செயலாளர், தொழில் முனைவோர்  உள்பட 38 பேர் பங்கேற்றோம். 

தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு

அந்நாட்டு பொருளாதார துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வர வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் அனைத்து சலுகைகளும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தேன். சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் கிளஸ்டரை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஆவண செய்வதாக செக் குடியரசு நாடு அமைச்சர் உறுதி அளித்து உள்ளார். தமிழகத்தில் உதிரி பாகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செக் குடியரசு நாட்டில் 'எவெக்டார்' விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலைகளை பார்வையிட்டதாக தெரிவித்தார். அந்நாட்டு பொருளாதார துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com