அமைச்சரானதும் முதல் கையெழுத்து...எதுக்கு தெரியுமா?

அமைச்சரானதும் முதல் கையெழுத்து...எதுக்கு தெரியுமா?
Published on
Updated on
1 min read

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி சென்னை தலைமை செயலகத்தில் பதவியேற்பு உறுதிமொழி பிரமாணம் மற்றும் ரகசிய பிரமாண படிவத்தில் கையெழுத்திட்டார்.

அமைச்சரானார் உதயநிதி:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, இன்று காலை ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

உறுதியளித்த அமைச்சர்:

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத்துறையின் தலைநகரமாக மாற்றுவதே எங்களுடைய இலக்கு என்றும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து:

தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதிக்கென்றே உருவாக்கப்பட்ட அறையில் அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து உதயநிதியை அவருடைய இருக்கையில் அமர்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது அமைச்சர் இருக்கையில் அமர்ந்த உதயநிதி ஸ்டாலின், பதவியேற்பு  உறுதிமொழி பிரமாணம் மற்றும் ரகசிய பிரமாண படிவத்தில் கையெழுத்திட்டார். 

முதலமைச்சரிடம் வாழ்த்து:

அதன்பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முகஸ்டாலினை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

மேலும், உதயநிதி அமைச்சரானதை தொடர்ந்து, அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com