அமித் ஷா கருத்துக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி...!

Published on
Updated on
1 min read

இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது என்ற மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்துக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார்.

இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து என குறிப்பிட்டவர், தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம் இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? என கேள்வியெழுப்பி உள்ளார். 

பிராந்திய மொழிகளை சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் உதயநிதி, நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என்று தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com