"அமைச்சா் உதயநிதி கீழ்த்தரமான அரசியல் செய்கிறாா்" கே.பி.முனுசாமி விமர்சனம்!

"அமைச்சா் உதயநிதி கீழ்த்தரமான அரசியல் செய்கிறாா்" கே.பி.முனுசாமி விமர்சனம்!
Published on: 
Updated on: 
1 min read

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியல் செய்து வருவதாக அதிமுக துணை பொதுச்செயலாளா் கேபி முனுசாமி விமா்சித்துள்ளாா். 

அரியலூரில் அதிமுக கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவிற்கு அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், பாஜக தலைமை அதிமுகவிற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வருவதால் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தொடரும் என தொிவித்தாா். 

மேலும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்துக்கு எதிராக போராட எதிா்கட்சிகளை கூட்டு சோ்ப்பது அவரது கீழ்த்தரமான அரசியலை காண்பிப்பதாக விமா்சித்தாா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com