மத்திய பாஜக அரசை சாடிய அமைச்சர் உதயநிதி ..!

மத்திய பாஜக அரசை சாடிய  அமைச்சர் உதயநிதி ..!
Published on
Updated on
1 min read

கட்சி பாகுபாடு இன்றி நாளை திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், ” நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம் என கூறிய அமைச்சர் இதற்கு ஒரே காரணம் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் என்று கடுமையாக சாடினார். 

நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம்.இதற்கு ஒரே காரணம் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான்.  நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கண்டனம் தெரிவித்து, திமுகவின் இளைஞர் அணி மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணியிலிருந்து நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறப்போர் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

கட்சி பாகுபாடு இன்றி மாணவர்களுக்காக மாணவர்களின் பெற்றோர்களுக்காகவும், அறப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்”,  என வேண்டுகோள் விடுத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com