``அழைப்பு வரவில்லை.. சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தேன்" - மு.க.ஸ்டாலின் விளக்கம்.. CM விஜய்யை விமர்சித்து பேசியது என்ன?

இந்த நிகழ்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகின.
"No invitation received.. Congratulated Sonia Gandhi" - MK Stalin's Clarification: What Did He Say Criticizing CM Vijay?
``அழைப்பு வரவில்லை.. சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தேன்" - மு.க.ஸ்டாலின் விளக்கம்.. CM விஜய்யை விமர்சித்து பேசியது என்ன?
Published on: 
Updated on: 
2 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நினைவுக்குறிப்பு நூலான 'பிளாங்கிங் எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நாடுமுழுவதும் இருந்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரேன், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த அபிஷேக் பானர்ஜி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தக வெளியீட்டு விழாவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் விஜய். ஆனால் கர்நாடகா முதல்வரிடம் காவிரி பிரச்சனை குறித்து உரையாடல் நடத்தவில்லை என்பது விமர்சனமாக முன்வைக்கப்பட்டது.

Belonging Book Release
Belonging Book Release

இந்த நிகழ்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகின.

ராகுல் காந்தியிடம் இருந்து செல்ஃபோன் அழைப்பு வந்தும் அதை ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும், காங்கிரஸ் உடன் எந்த உறவும் வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், "முதலமைச்சர் இதுவரை எதற்காவது பதில் சொல்லியுள்ளாரா?

முதலமைச்சரை பத்திரிக்கையாளர்கள் தான் கேட்க வேண்டும். காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. அதனால் கண்டுகொள்ளாமல் உள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக எங்கு போய் முதலமைச்சர் விஜய் என்ன பேசி உள்ளார்." எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா குறித்த கேள்விக்கு, "சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவுக்கு நான் வாழ்த்து தெரிவித்துள்ளேன், கடிதம் எழுதியுள்ளேன்.

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் வரவில்லை எனது உதவியாளரிடம் தொலைபேசியில் கூறினார்கள் அதன் அடிப்படையில் நான் வாழ்த்து அனுப்பி உள்ளேன்" எனக் கூறினார்.

"No invitation received.. Congratulated Sonia Gandhi" - MK Stalin's Clarification: What Did He Say Criticizing CM Vijay?
``அம்மாவின் அழகான வாழ்க்கை ஒரே நாளில் காணாமல் போனது" - எமோஷனலான ராகுல் காந்தி.. சோனியாவுக்கு 4 முறை புற்றுநோய் வந்ததா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.