"'Blast Blast' என எதிர்பார்த்த மக்களுக்கு... 'Waste Waste' தான்!” – 'ரீமேக் பட்ஜெட்' என கடுமையாக விமர்சித்த முக ஸ்டாலின்

தமிழ்நாடு பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்..
MK stalin
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழக அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், “இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘Blast Blast’-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste’ எனச் சொல்லும்படிதான் இருக்கு!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version Budget” என்றும் விமர்சித்துள்ளார்.

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து பட்ஜெட்டில் எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, “மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று மு.க. ஸ்டாலின் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசின் முதல் பட்ஜெட் குறித்து திமுக மற்றும் தவெக இடையே அரசியல் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மு.க. ஸ்டாலினின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com