காலையிலேயே மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட சிறப்பு தொகை 4000!

2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்...
காலையிலேயே மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட சிறப்பு தொகை 4000!
Published on
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு தொகையை அறிவித்துள்ளார். மேலும் அதற்கான முழு தொகையும் அவர்கள் வாங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.”என தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே மகளிருக்கு கோடைகால சிறப்பு நிதியாகவும் மூன்று மாதங்களின் உரிமை தொகையையும் சேர்ந்து 5000 ரூபாய் அவரது கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு பெண்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது விளிம்பு நிலையில் உள்ள முதியோர்,கைம்பெண்கள், மாற்றுதினாளிகள் மற்றும் பராமரிப்பு நிதியுதவி பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாத மாதம் பெரும் நிதியுதவி தொகையுடன் சேர்த்து 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com