ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி வியாதியா? ராயபுரம் தொகுதி எம்எல்ஏ பரபரப்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி இருப்பதால் தான் அவர் செய்தியாளர் சந்திப்பில் உலறி வருகிறார்.
ஜெயக்குமார்க்கு மைக்மேனியா மற்றும் மீடியா அலர்ஜி வியாதியா? ராயபுரம் தொகுதி எம்எல்ஏ பரபரப்பு
Published on
Updated on
1 min read
ஸ்டான்லி மருத்துவமனையில் கரும் பூஞ்சை நோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும் 3 மாதங்களில் ராயபுரம் தொகுதியில் கழிவுநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என ராயபுரம் தொகுதி எம்எல்ஏ இரா.மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜட்ரீம் மூர்த்தி; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திப்பில் உலறி வருகிறார் எனவும், அவர்க்கு மீடியா அலர்ஜி மற்றும் மைக்மேனியா நோய் இருப்பதால் தான் முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டி வருகிறார் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற முன்னாள் அமைச்சர்கள் முதல்வரை பாராட்டுகையில் இவர் மட்டும் முதல்வரை குறை கூறி வருகிறார் என்று தெரிவித்தார். அவர்கள் கட்சியிலுள்ள ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்யை குறை சொல்ல வேண்டியது தானே என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் கரும் பூஞ்சை நோய்க்கான சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும் எனவும் ராயபுரம் தொகுதியில் உள்ள கழிவுநீர் பிரச்சனை மூன்று மாதங்களில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். தற்போதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் 1000 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் ராயபுரம் பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறினார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com