
கிரிக்கெட் விளையாட சென்ற அந்த இளைஞருக்கு தெரிந்திருக்காது தனது மாதத்தில் பெயரால் நாம் இன்று கொல்லப்படுவோம் என்று தெரிந்திருக்க நியாயமில்லை. ஆம் இந்தியாவில் சிறுபான்மையினரின் உயிருக்கும், உடமைக்கும், கண்ணியத்திற்கு பாதுகாப்பில்லை. ஆங்காங்கே எப்போதாவது கலவரமாக நடந்துகொண்டிருந்த வன்முறைகள் தற்போது வாடிக்கையாகிவிட்டது.
மங்களூருவின் குடுப்புவில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஏற்பட்ட சாதாரண தகராறில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக 38 வயதான அஷ்ரஃப் மீது ஒ ரு கூட்டம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அந்த நபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் இறந்த அவரின் உடல் அருகில் உள்ள சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முதலில் அவரின் உடலை கைப்பற்றிய காவலர்கள் அவரின் மரணம் “குடிபோதையில் நிகழ்ந்திருக்கலாம் எனக்கூறி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், சில மணி நேரங்களுக்குள் இந்த தாக்குதல் ஒரு சமூகக் கலவரமாக வலுப்பெற்று பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர் மற்றும் அவரது உடலை காண அனுமதிக்கக் கோரினர்.
அதன் பிறகே போலீசார் “கூட்டமாக சேர்ந்து கொலை செய்ததன்” அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
அஷ்ரஃபின் உடலுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலமாக தாக்கியதில் உடல் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாகவே இறப்பு நேர்ந்திருக்கிறது.மேலும் குச்சியை வைத்து தாக்கியது அவரின் சிறுநீரகம் முற்றிலும் சிதைந்துள்ளது. வெளிக்காயங்கள் மட்டும் 35 இடங்களில் உள்ளத்துள். கீறல், சிராய்ப்பு, ரத்தக்கட்டு என அனைத்து விதமான காயங்களும் அவர் உடலில் ஏற்பட்டுள்ளது.
அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மூர்க்கத்தனம் கூட்டத்தின் மதவெறிக்கு அந்த இளைஞர் பலியாகியுள்ளார், இது இறக்கப்பட்ட வேண்டிய விஷயம் மட்டும் அல்ல. இவை நம்மை அச்சுறுத்தக்கூடிய விஷயங்கள்…
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.