
பா.ஜ.க ஆளாத மாநிலத்தில் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆளுரை மத்திய அரசு பயன்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.
மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாரதியின் திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்திந்த முத்தரசன், பனகராஸ் பல்கலைக்கழகத்தில் பாரதிக்கு மத்திய அரசு இருக்கை அமைக்க இருப்பது வரவேற்தக்கது என்றார். 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும், ஆளுநராக யார் வந்தாலும் மோடியின் ஏஜென்ட்கள் என்பதால் அவர்கள் ஏஜென்ட் வேலையை செய்வார்கள் என்றும், பா.ஜ.க ஆளாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆளுரை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும், மத்திய அரசு எதை விரும்புகிறதே, எதை செய்ய சொல்கிறதோ அதை நிறைவேற்றக்கூடியவர் தான் ஆளுநர் என்றார். தொடர்ந்து பேசிய முத்தரசன், சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் தமிழக அரசு முழு கவனம் செலுத்து வருவதாகவும், ஏற்கனவே நடந்த கொலைகள் போல் தற்போது கொலைகள் அதிகம் நடப்பதில்லை என்றார்.