

தமிழகத்திற்கு பருவ மழை காலம் துவங்கிவிட்டது. வங்க கடலில் மேற்கு மத்தியப் பகுதியில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி "மோந்தா" தீவிர புயல் இன்று, 02.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 70 கிமீ), காக்கிநாடாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 150 கிமீ, விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 250 கிமீ மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்கிழக்கே 480 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள ஆந்திரப் பிரதேச மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும்.
இது கரையை கடக்கும் போது மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் இருந்து 110 கிமீ வேகத்தில் வீசும். இது தீவிர புயல் கரையை கடக்கும் பொழுது ஏற்படும் காற்றின் வேகம்.
மேலும் மச்சிலிப்பட்டினத்தில் மணிக்கு 93 கி.மீ. வேகத்திலும், காக்கிநாடாவில் மணிக்கு 82 கி.மீ வேகத்திலும் விசாகப்பட்டினத்தில் மணிக்கு 68 கி.மீ வேகத்திலும் ராஜமுந்திரி விமான நிலையம் அருகே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் கங்காவரம் துறைமுகத்தில் மணிக்கு 58 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் தமிழகத்திற்கான புயல் இல்லை என்றாலும், தமிழகம் ஓரளவுக்கு நல்ல மழையை பெற்று வருகிறது, வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூரியன் தென்படவில்லை. அதீத மழை இல்லாவிட்டாலும், நிற்காமல் தூறி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.