பாஜக நிர்வாகி வீட்டில் 3 மணிநேரத்திற்கு மேல் சோதனை - முறைகேடான பண விவகாரம்....

பாஜக நிர்வாகி வீட்டில் 3 மணிநேரத்திற்கு மேல் சோதனை -  முறைகேடான பண விவகாரம்....
Published on
Updated on
1 min read

கோவில்பட்டி பாஜக நிர்வாகி வீட்டில் அமலாகத்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக சேதனை - பரபரப்பு

பா.ஜ.க.பட்டியல் பிரிவு அணி மாநில பொதுச்செயலாளர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சிவந்தி நாராயணன். கட்டிட தொழில் செய்து வருகிறார். மேலும் பல ஆண்டுகளாக பா.ஜ.கவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் தற்பொது பா.ஜ.க.பட்டியல் பிரிவு அணி மாநில பொதுச்செயலாளராக உள்ளார். இந்நிலையில் இன்று காலையில் மதுரையில் இருந்து 3 அமலாக்கதுறை அதிகாரிகள் திடீரென சிவந்தி நாராயணன் வீட்டில் ஆய்வு மேற்க்கொண்டனர். அவருடைய மனைவி கவுசல்யாவிடம் விசாரணை நடத்தினர். பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதை தொடர்;ந்து பாஜக நிர்வாகிகள் அவர் வீட்டு முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து அதிகாரிகள் ஒரு விசாரணை நடைபெறுகிறது.

3 மணி நேரம்  மனைவியிடம் விசாரணை

வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். இதையெடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். சிவந்தி நாராயணன் வெளியூரில் இருந்ததால் சுமார் 3மணி நேரம் அவரது மனைவி கவுசல்யாவிடம் விசாரணை நடத்தினர். தற்பொழுது சிவந்தி நாராயணன் வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து அமலாகத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகி;னறனர். மேலும் ஏ.கே.எஸ் சாலையில் உள்ள சிவந்தி நாராயணன் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தவுள்ளனர்.

பிரதமர் மோடி திட்டத்தின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 1500 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், இதனை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவத்தின் பணிகளை சிவந்தி நாராயணன் மேற்பார்வையாளராக இருந்து பார்த்து வருவதாகவும், இந்நிலையில் முறைகேடான பணம் பரிமாற்றம் தொடர்பாக ஒரு வழக்கில், சிவந்தி நாராயணணுக்கு தொடர்ப்பு உள்ளதா ? என்பது குறித்து இந்த சோதனை நடைபெற்ற இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com