“யார் ‘எட்டப்பன்’ என்று மக்களுக்கு தெரியும்” - கனிமொழி பேச்சால் பரபரப்பு! ‘முதுகில் குத்தியவர்கள்' என்று யாரை சாடுகிறார்?

"தவெக கூட்டிய தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் தேவையற்றது..."
Mp kanimozhi
Published on
Updated on
2 min read

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த தவெக அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்த நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுகவின் நிலைப்பாட்டை விளக்கினார். அதில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம் என அவர் தெரிவித்தார். மேலும், “தமிழக வெற்றிக் கழக அரசு நடத்திய எம்.பி.க்கள் கூட்டம் எதற்காக என்று தெளிவாக இல்லை” என்றும் “தவெக கூட்டிய தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் தேவையற்றது” என்றும் தெரிவித்துள்ளார். “தேர்தல்கள் முக்கியமல்ல; தமிழ்நாட்டின் நலன்தான் திமுகவுக்கு முக்கியம்.. தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதே திமுகவின் எண்ணம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

அதையடுத்து செய்தியாளர் ஒருவர், சமீபத்தில் தமிழகம் வந்து சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் “தொகுதி மறுவரையறையை யார் ஆதரிக்கிறார்களோ அவர்கள் எட்டப்பன்” என்று பேசியதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எம் பி கனிமொழி “யார் எட்டப்பர்கள்?.. யார் எட்டப்பர்கள் இல்லைனு?.. தேர்தல் முடிவுக்கு பின் தமிழக மக்களுக்கு மிக தெளிவாக தெரியும்.. யார் முதுகில் குத்தியவர்கள்?.. யார் நேர்மையாக அரசியல் செய்கிறார்கள்? என்று மக்களுக்கு தெரியும்” என்றும் குறிப்பிட்டார். 

மேலும் “இன்றைய MP கூட்டம் திசை திருப்புவதை தவிர்த்து வேறு என்ன.. சரி நோக்கம் இருக்கிறது என்றால்.. கூட்டம் நடந்து முடிந்துவிட்டது.. இதுவரை தீர்மானம் ஏதேனும் வெளியிட்டுள்ளார்களா? என்றும் தவெக-விற்கு கேள்வி எழுப்பினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com