கல்விக் கடனில் நாங்க தான் நம்பர் 1...வங்கி அதிகாரிகளை கெளரவித்த எம்.பி.வெங்கடேசன்...!

கல்விக் கடனில் நாங்க தான் நம்பர் 1...வங்கி அதிகாரிகளை கெளரவித்த எம்.பி.வெங்கடேசன்...!
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதுரையில் 125 கோடி ரூபாய்  கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்  தெரிவித்துள்ளார். 


மதுரை மாவட்டத்தில் அதிகமாக கல்விக் கடன் வழங்கிய கனரா வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் வங்கி அதிகாரிகளை அழைத்து எம்.பி.சு.வெங்கடேசன்  கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாவட்டம் முழுவதும் கல்விக்கடன் வழங்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் விளைவாக 2022-23ம் கல்வியாண்டில் மட்டும் ரூ.125.98 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மொத்தம் 3,122 நபர்கள் விண்ணப்பித்த நிலையில், 2,533 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ. 111.48 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.14.50 கோடியும் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பிற மாநிலங்களில் 60 சதவீதம் மட்டுமே கல்விக் கடன் வழங்கப்படும் நிலையில் மதுரை மாவட்டத்தில் 81 சதவீதம் அளவுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதுரை விளங்குகிறது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த அளவை இன்னும் அதிகரிக்க முயற்சி எடுப்போம் என்றும், 45% மட்டுமே கடன் வழங்கியுள்ள தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com