ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வேகாது என முரசொலி நாளேடு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான இன்றைய முரசொலி நாளிதழில் ஆளுநரை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில், கொளுத்தும் வெயிலின் அனலால் தமிழ்நாட்டு மக்களெல்லாம் அல்லல் பட்டு கொண்டிருக்கும் நிலையிலும், கோரமண்டல் ரயில் விபத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்த நேரத்தில் ஜூன் 3ம் தேதி குளுகுளு வாசத்தில் பயணம் பட்டு துணைவேந்தர்களை அழைத்து அரசியல் செய்து கொண்டிருந்தார் ஆளுநர் என குற்றம்சாட்டியுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகினால் என்ன? தமிழ்நாட்டுப் பயணிகள் நிலை என்ன ஆனால் என்ன?அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு பல நேரங்களில் வாலறிந்த நரியாக ஆனாலும், அவர் பாடம் பெறுவதில்லை எனவும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாலும் ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வேகாது எனவும் முரசொலி நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.