சட்டமன்றத்தில் செய்த சைகை; ஆன்லைனில் எழுந்த விமர்சனங்கள் - விஜய் அளித்த விளக்கம் என்ன?

இந்தநிலையில் தனது சைகை யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என விளக்கம் அளித்துள்ளார் விஜய்.
"எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை" - சைகை குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கம்!
"எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை" - சைகை குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கம்!
Published on
Updated on
1 min read

நேற்று நடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது சர்க்காரியா கமிஷன், மிசா கைது உட்பட பல விவகாரங்களை பற்றி பேசுகையில் முதல்வரின் சைகை விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்தநிலையில் தனது சைகை யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

விஜய்யின் சைகை மிசா கைதின் போது அப்போதைய திமுக முதலமைச்சர் மகனான மு.க.ஸ்டாலின் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளாகி, தாடையில் காயமடைந்ததை கேலியாக சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது என விமர்சனங்கள் எழுந்தன.

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, விஜய்யின் சைகையை சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

"மிசா தியாகத்தை சைகையால் கொச்சை செய்கிறார் முதலமைச்சர்" எனக் கூறியிருந்தார் அவர்.

இணையத்திலும் முதல்வர் விஜய், ஒருவரின் காயத்தை கேலி செய்யும் வகையில் சைகை செய்வதா? எனக் கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

"எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை" - சைகை குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கம்!
அமைச்சராகும் தஞ்சாவூர் MLA; வெளியேற்றப்படும் 3 புள்ளிகள்... TVK அரசில் மாற்றம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com