அரசு பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்...! வலை வீசும் போலீசார்...!

அரசு பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்...! வலை வீசும் போலீசார்...!

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் அரசு பேருந்து மீது மர்ம நபர் கல் எறிந்ததில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதம்:- சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிற்றம்பலம் கிராமத்துக்கு செல்ல அரசு பேருந்து சேவை உள்ளது. நேற்று இரவு திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து மயிலாடுதுறை வந்த அரசுப் பேருந்தை ஓட்டுனர் துரைமாணிக்கம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்து திருவிழந்தூர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மர்ம நபர் பேருந்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் , மர்ம நபரை விரட்டிய போது தப்பி ஓடி உள்ளார். இது குறித்து ஓட்டுனர் துறை மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அப்பகுதியில் உள்ள வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்து அதன் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com