
வட மாநில நிலத்தாருக்கு துணை போகும் காவல்துறை யினரை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் பர்கூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், "அஞ்ச மாட்டோம்,.. அசர மாட்டோம்,...அடுக்கு முறைக்கு கெஞ்ச மாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பர்கூர் பகுதியில் உள்ள கல்குவாரிகள் மற்றும் கிரானைட் கம்பெனிகளில் வட மாநில தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இதனால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை எனவும் இதற்கு பர்கூர் காவல் உதவி ஆய்வாளர் மும்தாஜ் துணை போவதாகவும் மேலும் கஞ்சா மற்றும் கனிமவள கொள்ளைகளுக்கு உடந்தையாக காவல் உதவியாளர் மும்தாஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து நாம் தமிழர் கட்சி பலமுறை கோரிக்கை மற்றும் புகார்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என வலியுறுத்தி ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் நுழைவதற்கு நுழைவுச்சீட்டு கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் எனவும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் இளையராஜாவை கஞ்சா போதையில் தாக்கிய வட மாநிலத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் இதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பர்கூர் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இந்த புகார்கள் குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிக்க } தமிழக அரசிடம் சிவாஜி சிலையைத் திறக்க வேண்டுகோள் விடுத்த நடிகர் பிரபு
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்து கொண்டனர். பர்கூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க } இளையராஜாவை மீண்டும் முகநூலில் விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்