பூத்துக் குலுங்கும் ஆண்டுக்கு இருமுறை பூக்கும் நாகலிங்க  பூ..  

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நாகலிங்கம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
பூத்துக் குலுங்கும் ஆண்டுக்கு இருமுறை பூக்கும் நாகலிங்க  பூ..   
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நாகலிங்கம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

ஆண்டுக்கு இருமுறை பூக்கும் நாகலிங்க  பூவில், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே எலுமிச்சம்பள்ளம் என்ற இடத்தில் வீரராகவன் என்பவர் வீட்டின் முன்பாக நாகலிங்கம் மரம் உள்ளது. மிகவும் பழமையான  இந்த மரத்தில், தற்போது நாகலிங்கம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இது கடவுளுக்கானதல்ல, இதுவே கடவுள் என்றும், பூவுக்குள்ளே இறங்கி வந்து  இறைவன் குடியிருக்கிறான் என்றும் போற்றப்படும் இந்த நாகலிங்கம் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும், வேர்களுக்கும், கிளைகளுக்கும், இடையே, தனித்தனியாக கிளைகள் வளர்ந்து, அதில் இந்த நாகலிங்கம் பூக்கள் பூக்கின்றன.

இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பறித்து செல்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com