நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!

நாகப்பட்டினம்:   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!
Published on: 
Updated on: 
1 min read

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பரபரப்பு நிலவியது. 

நாகப்பட்டினம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடிர் தீ விபத்து; ஏற்பட்டதால்  அதிகாரிகள், மக்கள் அலரியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்பொழுது மூன்றாவது தளத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் AC -யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் லேப்டாப், கணினி, பழுதான ஆதார் கருவி மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் மக்கள் குறைதீர் கூட்டம் வந்த மாற்று திறனாளிகள் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் தற்பொழுது நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்து வருகின்றனர் . இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com