நாங்குநேரி சம்பவம்; விசிக கண்டன ஆர்பாட்டம்...!

நாங்குநேரி சம்பவம்;  விசிக கண்டன ஆர்பாட்டம்...!
Published on
Updated on
1 min read

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நாங்குநேரி மாணவர் தாக்கப்பட்ட  சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

அதில் நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா தேவி ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தியும்  200க்கும் மேற்பட்ட விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள்  ரத்தினவேல் , கலையரசன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில்  நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திரா தேவி ஆகியோரை கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பெரம்பலூர்  விடுதலைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வீர செங்கோலன், தமிழ் மாணிக்கம் , வழக்கறிஞர் ஸ்டாலின் ,லெனின் , உட்பட ஒன்றிய கழக பேரூர் நிர்வாகிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200- க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணனை கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com