nayinar nagendiran
nayinar nagendiranmmtv

விசிக - வுக்கு இந்த முறை 5 சீட்டு அடுத்த முறை 2 சீட்டா!? “திமுக -வில் புகைச்சல் தான்!! -நயினார் பகீர்!

“மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத்தான் மாநில அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்"
Published on

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை  சந்தித்துப் பேசுகையில்,முருக பக்த மாநாட்டிற்கு இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை, நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். 

மேலும், முருக பக்தி மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதில் கட்சிப் பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

கீழடி அறிக்கை வெளியிடுவதில் ஏன் தாமதம்? எனக் கேள்வி எப்பபட்டதற்கு பதிலளித்த அவர், “மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத்தான் மாநில அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.  தமிழகத்தில் சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பதாகவும், தமிழைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

தமிழகம் உலகத்திலேயே சிறந்த மொழி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி எனத் தமிழைப் போற்றிய அவர், தமிழை வைத்து இன்னும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்". என தமிழ் உணர்வைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுபவர்களைச் சாடினார்.

திருக்குறளை 63 மொழிகளில் மத்திய அரசுதான் மொழிபெயர்த்தது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், ஐநாவில் மோடி தமிழைப் பற்றி பேசியிருக்கிறார். அண்டை மாநிலங்களுக்குச் சென்றாலும் மோடி தமிழைப் பற்றி பேசுகிறார் என்று பேசினார். 

திமுக கூட்டணியில் புகைச்சல் நிலவுகிறதா? என்ற கேள்விக்கு,

புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.

 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டணியில் சீட்டைப் பற்றி கவலை இல்லை கூட்டணி தொடர்வோம் எனக்கூறுகிறார், அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? என கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது ஐந்து சீட்டு வாங்கி இருக்கிறார்கள், வரும் தேர்தலில் இரண்டு சீட்டு வாங்கிட்டு தொடர்வார்களா? இந்தக் கேள்வி அவரிடம் கேட்க வேண்டும் என்று சவால் விடுத்தார். பாஜக கூட்டணிக்கு வேறு யாரும் வர வாய்ப்புள்ளதா,பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?  என்ற கேள்விக்கு, பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் பத்து மாத கால அவகாசம் இருக்கிறது. வலுவான கூட்டணியாக இருக்கும்  எங்களிடம்  ஏன் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். வலுவில்லாத கூட்டணியிடம் கேட்க மாட்டீர்களா என எதிர் கேள்வி எழுப்பியிருந்தார். 

நான்கு ஆண்டு சாதனைகளைக் குறித்து மக்களிடம் பேசாமல், எதிர்க்கட்சி பற்றியும் கூட்டணி பற்றியும் பேசி “புலி வருது… புலி வருது” என்பது போல் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆளுங்கட்சியின் செயல்பாட்டை விமர்சித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் தமிழகம் வர வாய்ப்புள்ளதா?  என்ற கேள்விக்கு, பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது. பிரதமர் வரும் அளவிற்கு தமிழகத்தில் எந்த பெரிய வேலையும் இல்லை. அமித் ஷா அவர்களே அதைப் பார்த்துக் கொள்வார் என்று கூறி, தமிழக விவகாரங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகக் கவனித்து வருவதை உறுதிப்படுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com