
உதகை ராஜ்பவன் குடியிருப்பில் வசித்து வருபவர் சுரஜ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா 2-வது பிரசவத்துக்காக கடந்த 30-ந் தேதி உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் காஞ்சனாவிற்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சில நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்காக கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டு இருந்த ஊசியை செவிலியர் எடுத்து உள்ளார். அப்போது ஊசி உடைந்து கையில் சிக்கி உள்ளது.
இதனால் சஞ்சனா வலி தாங்க முடியாமல் கைவீக்கத்துடன் இருந்தநிலையில் கணவர் சுரஜ் பகதூர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் கோவை மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென கூறியதையடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்து மருத்துவர் அதிகாரி ரவிசங்கர் பெண்ணின் கையில் மாட்டியது ஊசி அல்ல. ஊசிக்கு மேல் பகுதியில் பயன்படுத்தப்படும் வென்சுவான் என்னும் 1 மில்லி மீட்டர் அளவுள்ள பொருள் இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோவையில் உள்ள சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து சூரஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை மருத்துவர்களின் இந்த அலட்சிய போக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.