நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்...

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்...
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் மிகவும் பிரசித்து பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 
தேரோட்டத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சியின் மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். 

தமிழ்நாட்டின் 3வது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரிய நெல்லையப்பர் தேரினை 'தென்னாடுடைய சிவனே போற்றி' 'என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற மந்திரம் முழங்க ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 

தேரோட்டத்தினை முன்னிட்டு நான்கு ரத வீதிகளில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

தேரோட்டத்தில் திருநெல்வேலி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com