“நாங்கள் எதற்கு சட்டமன்றத்திற்கு வர வேண்டும்?”- அவையில் கொந்தளித்த உதயநிதி! அப்படி என்ன பேசினார் அமைச்சர் ராஜ்மோகன்?

இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவேண்டும். அதில் அமைச்சர் முதலில் பேசினால் என்ன?
Tamil Nadu Assembly
Tamil Nadu Assembly
Published on
Updated on
2 min read

இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் பிரபடுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் - சமூக நீதி மானிய கோரிக்கை நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜ்மோகன் நேபாள காட்டாற்று வெள்ளம் பற்றி தகவல்களை தெரிவிக்கத் தொடங்கினார். கடந்த 2 நாட்களாக தேசத்தையே ஒரு சம்பவம் உலுக்கி கொண்டிருக்கிறது, என்று நேபாளத்தையே உலுக்கிய காட்டாற்று வெள்ளத்தை பற்றி பேச தொடங்கினார். அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த திமுக மற்றும் அதிமுகவினர் எழுத்து கடும் அமளியில் ஈடுபட தொடங்கினர். அப்போது, தாங்கள் இதை பற்றி பேசி கவன ஈர்ப்பிற்கு கொண்டு வருவதற்கு முன்பே இதை பற்றி பேசுவதா? என்று மொத்தமாக எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து பேச அனுமதிப்பதாகவும், முதலில் அமைச்சர் இது பற்றி பேசுவதில் தவறில்லை என்றும் அவைத்தலைவர் அவையில் பேசினார். மேலும், அவையை அமைதியாக்க முயற்சித்தார்.

மேலும், "அமைச்சர் தனது கருத்துக்களை கூறிய பின்பு உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் அதற்கு நான் அனுமதியளிக்கிறேன்" என்று அவர் அவைத்தலைவர் கூறினார். ஆனாலும் அவையில் அமளி நீடித்த வண்ணமே இருந்தது. மேலும், "இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவேண்டும். அதில் அமைச்சர் முதலில் பேசினால் என்ன? அவருக்கு பின்பு நீங்கள் பேசினால் என்ன?" என்று அவைத்தலைவர் கூறினார். மேலும், இதற்கு முன்பு கரூர் விவகாரத்தில் முதலைமைச்சர் தன்னுடைய கருத்தை முன்வைத்த பின்பே அவையில் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அவையில் உள்ளோர்க்கு நினைவூட்டினார். அனைத்து கட்சிகளும் இது குறித்து அறிவிப்பு வழங்கியுள்ளதாகவும், அமைச்சர் பேசிய பிறகு அது குறித்து பேச எதிர் தரப்பினருக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று அவைத்தலைவர் பேசினார்.

இந்த அமளியைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நாங்கள் அரசை எதுவும் குறை சொல்ல விரும்பவில்லை. அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவருகிறோம், அதன் பிறகு நீங்கள் பதில் சொல்லுங்கள். நாங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல் நீங்களே அனைத்திற்கும் பதில் கூறினால், அப்போ நாங்கள் எதற்கு சட்டமன்றத்திற்கு வரவேண்டும்" என்று அவர் பேசினார். இதனையடுத்து பேசிய அவைத்தலைவர், "முன்பே தகவல்களை தெரிந்து கொண்டுள்ள அரசு அது பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்ற கேள்வியை எழுப்பினார். "அவர் (அமைச்சர் ராஜ்மோகன்) கூறிய அனைவருக்கும் அனுமதி தருகிறேன்" என்று கூறிய போதும் அவையில் மேலும் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து, அமைச்சர் ராஜ்மோகன், "எதிர்கட்சியினரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்" என்று கூறி அமர்ந்தார். அதன்பிறகு சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரையும் இது குறித்து பேச அனுமதியளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com