வங்கக்கடலில் நாளை 'முரசு' புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 'அர்னாப்' புயல் உருவாகி கரைய கடந்த நிலையில் தற்போது 'முரசு' புயல் உருவாகியுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 2-ம் தேதி மாலை ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், நவம்பர் 2-ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உருவான 'அர்னாப்' புயலானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்தப் புயலால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடுமையான காற்றுடன் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கொனசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்தன. தற்போது உருவாகியுள்ள 'முரசு' புயல் கூட நவம்பர் 2-ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.