“புதிய அரசு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மு க ஸ்டாலின்!ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணியை தாமதிப்பது ஏன்?

ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும்
mk stalin
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி (மே 4) நன்கு நாட்கள் ஆனா நிலையில் பெரும்பான்மை  தொகுதிகளை பெட்ரா தமிழ வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு இன்னும் பதவி ஏற்பதற்கான ஆளுநர் அழைப்பு வரவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று பலரும், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு எதிராக தங்களது கருத்துக்களையும் விஜய்க்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் “விஜய் ஆட்சி அமைப்பதற்கு திமுக எந்த இடையூறும் செய்யாது” என தெரிவித்திருந்தார். மேலும் “உடனே மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதில் திமுகவிற்கு விருப்பமில்லை” என்றும் “ஆட்சி அமைத்த பின் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் கொடுப்பது என்பது மிகவும் கடினம், ஆனால் மாதம் 1000 ரூபாய் எனும் மகளிர் உரிமை தொகையையும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும்” எனவும்  கூறியிருந்தார்.

தற்போது மு க ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு, மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி” என்று ஆளுநரின் தாமதிக்கும் செயலை கண்டித்தார். 

மேலும் இது மத்திய அரசின் மறைமுக நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் இதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சிக்குவழிக்கும் என்றும் கருதி இந்த எதிர்ப்பு குரலாக பதிவு செய்துள்ளார். மேலும், “இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும்” என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதகா கேட்டுக்கொண்டார் முக ஸ்டாலின்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com