உயர்நீதிமன்ற புதிய கட்டட அடிக்கல் நாட்டுவிழாவில் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்!

உயர்நீதிமன்ற புதிய கட்டட அடிக்கல் நாட்டுவிழாவில்  மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்பட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை பாரிமுனையில் உயர்நீதிமன்ற பயன்பாட்டுக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டுவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவை, காஞ்சி, திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஆணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தென்னிந்திய மக்களுக்காக உச்சநீதிமன்ற கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமைய வேண்டும் எனவும், நீதிபதி நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினரும் இருக்கும் வகையில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com