மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தின் புதிய அறிக்கை....

மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மாற்றம் தொடர்பாக மருத்துவ கல்லூரி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தின் புதிய அறிக்கை....
Published on
Updated on
1 min read

பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி  முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவக் கல்லூரிக்கும்,  தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கும் பணிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பணியிலிருந்தோர் ஓய்வு உள்ளிட்ட நிர்வாகக் காரணங்களுக்காக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு பணியிட மாறுதல் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதே போல் மூத்த மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரியின் இதயவியல் துறை பேராசிரியர் செந்தில் குமார் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி பொறுப்பு  முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆப்தல்மாலஜி துறை பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவக் கல்லூரின் முதல்வராகவும்,  சென்னை மருத்துவக் கல்லூரியின் பிசியாலஜி இயக்குநர் திருப்பதி கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் ராஜ ஸ்ரீ திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும்,  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஹெபடாலஜி துறை இயக்குநர் K. நாராயணசாமி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,  

திருச்சி கி.ஆ.பெ மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் G.சிவக்குமார் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com