திருச்செந்தூர் கோவிலுக்கு புதிய அறங்காவலர்களை நியமித்து அரசு ஆணை வெளியீடு!

திருச்செந்தூர் கோவிலுக்கு புதிய அறங்காவலர்களை நியமித்து அரசு ஆணை வெளியீடு!
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்களாக முன்னாள் எம்.பி  கே.பி.கே குமரனின் மனைவி அனிதா குமரன் உள்ளிட்ட 5 பேரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது


உலகப்பிரச்சித்தி பெற்ற சுப்பரமணிய சுவாமி கோவிலுக்கு புதிய முறைவழிசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட சட்டப்பிரிவு 46 - 3ன் கீழ் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.

அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அரசுக்கு அளிக்க, 7 உறுப்பினர்களை கொண்ட மாநில குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய முறைவழிசாரா அறங்காலர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாப்பிள்யூரணி செந்தில், திருச்செந்தூர் மாநாடு தண்டுபத்துவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.பி.கே.குமரனின் மனைவி அனிதா குமரன், வடக்கு ஆத்தூர் ராமதாஸ், சென்னை சாந்தோமைச் சேர்ந்த அருள்முருகன், தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த கணேசன் ஆகியோரை முறைவழிசாரா அறங்காலர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் புதிய அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அறங்காலர்கள் பதவியில் இருப்பார்கள் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com