கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஏன் கிடைக்கவில்லை என்பதை, புதிய இணையதளம் மூலம், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மகளிர் தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, கடந்த 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், தகுதி இருந்தும் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 'காற்றில் பறந்த கல்விக் கடன் ரத்து' குற்றம்சாட்டும் எடப்பாடி!
இதற்கிடையில், தகுதி இருந்தும் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை https://kmut.tn.gov.in தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இந்த இணையதளத்தில், ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, அதன் மூலம் ஏன் பணம் வரவில்லை என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.