நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில்.........கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தொட்டிகட்டும் பணி...! -அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார்.

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில்.........கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தொட்டிகட்டும் பணி...! -அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார்.
Published on
Updated on
1 min read

விருத்தாசலம் அருகே புதுக்கூரைபேட்டை கிராமத்தில் நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் தொட்டி கட்டும் பணியை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார். இந்ததிட்டத்தின் கீழ் இரண்டு நகராட்சி, 4 பேரூராட்சி, 625 கிராமங்கள் பயன்பெறும் தகவல்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினை ஆதாரமாகக் கொண்டுபொது மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நகராட்சி, 4 பேரூராட்சி, 625 கிராமமக்கள் பயன்பெறும் வகையில் விருத்தாசலம் அருகே புதுக்கூரைபேட்டை கிராமத்தில் இந்த கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தொட்டிகட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த பணி முடிந்தவுடன் இதன்மூலம் ஒரு நாளைக்கு 31.26 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று கூட்டுக்குடிநீர் தொட்டி கட்டும் பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்து நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்து தொட்டியின் மீது ஏறி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அவருடன் வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வெ. கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்ராதாகிருஷ்ணன் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com