கோவை சம்பவம்: திமுக கவுன்சிலர் உட்பட பலரின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனை!!

Published on

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவையில் 21 இடங்களிலும் சென்னையில் 3 இடங்களிலும் தென்காசியில் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் குறிப்பாக உக்கடம் குண்டுவெடிப்பு தொடர்பாகவும் சோதனை மேற்கோள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில், திமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோக 23 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பாக பயிற்சியளித்ததாக கூறப்படும் தகவல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், சென்னையில் 3 பேர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com