இரவு நேர சாலை பணி... தலைமை செயலாளர் மேற்பார்வை!!!

இரவு நேர சாலை பணி... தலைமை செயலாளர் மேற்பார்வை!!!
Published on: 
Updated on: 
1 min read

சென்னையில் நடந்து வரும் இரவு நேர சாலை அமைக்கும் பணிகளை  தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்துள்ளார்

தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் (2021-22) கீழ்,  பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் இன்று நுங்கம்பாக்கம்,வள்ளுவர் கோட்டம், மந்தவெளி ஆகிய 3 பகுதிகளில் நடைபெற்று வரும் இரவு நேர சாலை அமைக்கும் பணியை தமிழ்நாடு தலைமை செயலாளர்
வெ இறையன்பு  பார்வையிட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் சாலைகளை தரமானதாகவும், விதிகள் படி முறையாக அமைக்கப்படுகிறதா எனவும் சாலையின் சம நிலை, வெப்பம்,அடர்த்தி, தரம் போன்றவை சரியாகவும், விரைவாக முடித்திடவும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  ஆய்வின் போது உடன்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் தலைமை பொறியாளர்கள் இருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com