மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த வைகை ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நிலையூர் கால்வாயில் புதிய ஆற்றுப்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்க பூமி பூஜை நடைபெற்றது
வருடா வருடம் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவதும் இந்தத் திருவிழாவை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்
இந்த நிலையில் முள்ளிப்பள்ளம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வைகை ஆற்றில் திருவிழா செல்ல வழியில் நிலையூர் கால்வாய் அமைந்துள்ளது இந்த கால்வாயில் பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் புதிய பாலம் கட்டி தர கோரிக்கை வைத்தனர்
இதனை நிறைவேற்றும் வகையில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை துவங்க சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பூமி பூஜை செய்தார்