அதன்பேரில் விசாரித்ததில், சரத்குமார் அவரது குழந்தையை சென்னையை சேர்ந்த 4 பேரிடம் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்றதும், அவர்கள் அந்த குழந்தையை ஈரோடை சேர்ந்த 3 பேரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது. அவர்களில் 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை கைது செய்து விசாரித்ததில் குழந்தையின் தாய்க்கும் இதில் தொடர்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.